Office Hours: Mon - Fri: 9:00 am - 4.45 pm

Consular Service Hours: Mon - Fri: 9:30 am - 1.30 pm

Consular Service Hours:

Mon - Fri: 9:30 am - 1.30 pm

Office Hours: Mon - Fri: 9:00 am - 4.45 pm

Consular Service Hours: Mon - Fri: 9:30 am - 1.30 pm

Consular Service Hours:

Mon - Fri: 9:30 am - 1.30 pm

Office Hours:

Mon - Fri: 9:00 am - 4.45 pm

Consular Service Hours:

Mon - Fri: 9:30 am - 1.30 pm

Office Hours:

Mon - Fri: 9:00 am - 4.45 pm

Consular Service Hours:

Mon - Fri: 9:30 am - 1.30 pm

Office Hours:

Mon - Fri: 9:00 am - 4.45 pm

Consular Service Hours:

Mon - Fri: 9:30 am - 1.30 pm

Japan–Sri Lanka Joint Statement Tokyo, 29 September 2025

Japan–Sri Lanka Joint Statement Tokyo, 29 September 2025

  • The Prime Minister of Japan, ISHIBA Shigeru met with the President of Democratic Socialist Republic of Sri Lanka, Anura Kumara Disanayaka, in Tokyo during his Official Visit to Japan from September 27 to 30,
  • Recalling the long-standing friendly relations between Japan and Sri Lanka, both sides reaffirmed their intention to further deepen and expand cooperation, including inter alia in the areas of security, economy, investment, and development cooperation, under the framework of the deepened and expanded Comprehensive Partnership established between the two countries.
  • Prime Minister ISHIBA commended the trajectory of recovery of the Sri Lankan economy through the steady implementation of the IMF program and debt restructuring, and reiterated Japan’s continued support for Sri Lanka’s reform efforts. President Disanayaka expressed appreciation for Japan’s leadership as one of the Co-Chairs of the Official Creditor Committee (OCC), enabling early signing of Sri Lanka’s debt restructuring, including Japan being the first OCC member to conclude a bilateral agreement on debt restructuring between a member country of the OCC and Sri Lanka in March this year. Both sides recognized that the steady implementation of various reforms under the IMF program and the early completion of the debt restructuring process will further restore investors’ confidence in the Sri Lankan economy. Both sides affirmed the importance of the provision of foreign loans that takes into account debt sustainability and transparency.
  • President Disanayaka expressed appreciation for Japan’s continued support, including the resumption of 11 previously signed yen loan projects, in 2024, ahead of other creditor countries. Both sides welcomed the recommencement of the bidding of the Bandaranaike International Airport Development Project (Phase 2), which will contribute to strengthen connectivity and promote tourism in Sri Lanka, and confirmed commitment to expediting the related process for early completion. Both sides also confirmed the importance of steadily implementing already existing yen loan projects, including the development and improvement of transmission lines and the digitalization of terrestrial television broadcasting.
  • Both sides welcomed signing and exchanging of Notes concerning Japan’s Grant Aid for the Project for the Enhancement of Productivity in the Dairy Sector with a view to promoting inclusive economic development of Sri Lanka through the improvement of livelihoods of small-scale dairy farmers. For the sustainable economic development of Sri Lanka, both sides confirmed the importance of developing infrastructure and transport solutions to streamline urban traffic in major cities such as Colombo.
  • Both sides concurred to further discuss the ways to strengthen and enhance export with Japanese investment based on the Conceptual Roadmap on “Building an Export-Oriented Industrial Corridor”. In this connection, both sides concurred to resume the Inter-governmental Economic Policy Dialogue, which jointly explores the possibilities of enhancing Sri Lankan industry and economy. Both sides noted the significant opportunity that lies in the area of ​​trade and investment and confirmed the importance of further improving the business environment in Sri Lanka, including transparency, predictability, and non-discriminatory treatment. In this regard, both sides welcomed the launch of Japan-Sri Lanka Committee on Business Environment in August this year, which is to be held on a quarterly basis.
  • President Disanayaka shared the qualitative change in the investment and business environment emerging in Sri Lanka following the election of the current Government. He invited Japanese corporates to explore the opportunities available and invest in the several high-potential sectors in Sri Lanka.
  • Both sides confirmed the importance of deepening defense and security cooperation between the two countries and enhancing the security and deterrence capabilities of Sri Lanka to ensure the peace and stability of the Indian Ocean Region. From this perspective, both sides welcomed the provision of advanced Japanese UAVs (Unmanned Aerial Vehicles) for enhancing maritime surveillance and disaster relief capabilities, through the first Official Security Assistance (OSA) project vis-à-vis Sri Lanka, decided during the visit.
  • Both sides also welcomed the steady progress in defense cooperation between the two countries through port calls by Japan Maritime Self-Defense Force (JMSDF) vessels and joint exercises between the JMSDF and the Sri Lankan Navy. Both sides confirmed that the visit of the Minister of Defense of Japan NAKATANI Gen to Sri Lanka in May this year, where a decision was taken on the convening of the second Japan-Sri Lanka Defense Dialogue, underscored the commitment to further promoting cooperation in this area between the two countries.
  • Prime Minister ISHIBA expressed Japan’s intention to continue its support for Sri Lanka’s efforts toward eradicating corruption. Both sides affirmed the importance of addressing socio-economic challenges of conflict-affected communities, especially in the Northern and Eastern Provinces of Sri Lanka. Bearing in mind that national reconciliation and socio-economic development are closely interconnected, Prime Minister ISHIBA reaffirmed Japan’s commitment to continuing its support for the development of the Northern and Eastern Provinces.
  • President Disanayaka expressed appreciation for Japan’s continued assistance to Sri Lanka’s mine action program as a major donor in demining activities in Sri Lanka. Japan’s assistance to the demining program was recognized as contributing significantly to the overall goal of a “Mine-Impact-Free Sri Lanka” and impacting positively towards national reconciliation, and supporting community empowerment, and post-conflict development in the North and East of Sri Lanka.
  • Both sides discussed ways to promote people-to-people exchanges, including skilled human resources and concurred on further strengthening ties between the two countries in areas such as language education, culture and sports. Considering the deepening of mutual cultural understanding, both sides concurred on the importance of further promoting Japanese language education in Sri Lanka and reaffirmed both governments’ intention to advance efforts in this regard.
  • Both sides had an exchange of views on regional and international issues of mutual interest. Reiterating the importance of greater engagement by Japan in the region through Japan’s vision of a Free and Open Indo-Pacific, both sides reaffirmed the need for continued cooperation on issues of mutual interest, including on the rules based international order. Both sides also reiterated support for multilateralism and democracy.
  • As maritime nations, both sides reaffirmed the importance of maintaining peace, stability, security, and freedom of navigation and overflight, and underscored the significance of respect and adherence to international law, as reflected in the 1982 United Nations Convention on the Law of the Sea (UNCLOS) for maintaining a stable and peaceful international maritime order.
  • Both sides reiterated their continued cooperation towards an early reform of the United Nations Security Council through positive engagement in the intergovernmental negotiations. Prime Minister ISHIBA expressed his gratitude for Sri Lanka’s continued support for Japan’s bid for a permanent seat in the Security Council.
  • Both sides reaffirmed the importance of maintaining and strengthening the Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) as the cornerstone of global nuclear disarmament and non-proliferation architecture, and are jointly determined to continue to work together in this area. In this context, Prime Minister ISHIBA referred in particular to Sri Lanka’s ratification of the CTBT in 2023 and the importance of the IAEA Additional Protocol.
  • Prime Minister ISHIBA welcomed Sri Lanka’s active participation in EXPO 2025 Osaka, Kansai, Japan and the visit of President Disanayaka to grace the inauguration of the National Day of Sri Lanka. Both sides also acknowledged the emphasis on augmenting economic cooperation including two high-level business events being held in Osaka and Tokyo as an integral part of the visit.
  • President Disanayaka expressed sincere appreciation to Prime Minister ISHIBA and the people of Japan for the warm welcome and hospitality extended during the visit.

 

ජපාන-ශ්‍රී ලංකා ඒකාබද්ධ ප්‍රකාශය
ටෝකියෝ, 2025 සැප්තැම්බර් 29

 

  • 2025 සැප්තැම්බර් 27 වැනි දින සිට 30 වැනි දින දක්වා ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ජනාධිපති, අනුර කුමාර දිසානායක මහතා ජපානයේ නිරත වන නිල සංචාරයේදී, ජපාන අග්‍රාමාත්‍ය ඉෂිබා ෂිගේරු මහතාව ටෝකියෝ නුවරදී හමුවිය. 
  • ජපානය සහ ශ්‍රී ලංකාව අතර පවතින දිගුකාලීන මිත්‍ර සබඳතා සිහිපත් කරමින්, දෙරට අතර ස්ථාපිත කර ඇති ගැඹුරු සහ පුළුල් විස්තීර්ණ හවුල්කාරිත්වයේ රාමුව යටතේ ආරක්ෂාව, ආර්ථිකය, ආයෝජන සහ සංවර්ධන සහයෝගීතාව යන ක්ෂේත්‍රවල සහයෝගීතාව තවදුරටත් වර්ධනය කිරීමට සහ පුළුල් කිරීමට දෙපාර්ශ්වයටම ඇති අරමුණ පිළිබඳව නැවත තහවුරු කළහ.
  • ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල් වැඩසටහන (IMF) අඛණ්ඩව ක්‍රියාත්මක කිරීම සහ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම තුළින් ශ්‍රී ලංකා ආර්ථිකය යථා තත්ත්වයට පත් කිරීමේ ගමන් මග පිළිබඳව අගමැති ඉෂිබා මහතා සිය ප්‍රසාදය පළ කළ අතර, ශ්‍රී ලංකාවේ ප්‍රතිසංස්කරණ ප්‍රයත්න සඳහා ජපානය අඛණ්ඩව සහයෝගය දක්වන බව යළි අවධාරණය කළේය. ශ්‍රී ලංකාවේ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ ක්‍රියාවලිය අවසන් කිරීමට හැකි වන පරිදි, නිල ණයහිමි කමිටුවේ (OCC) සම සභාපතිවරයෙකු ලෙස ජපානය ලබා දුන් නායකත්වයට හා මෙම වසරේ මාර්තු මාසයේදී නිල ණයහිමි කමිටුවේ සාමාජික රටක් සහ ශ්‍රී ලංකාව අතර ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම පිළිබඳ ද්විපාර්ශ්වික ගිවිසුමක් අවසන් කළ පළමු නිල ණයහිමි කමිටුවේ සාමාජිකයා ජපානය වීම සම්බන්ධයෙන් ජනාධිපති දිසානායක මහතා ස්තුතිය පළ කළේය. ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල් වැඩසටහන යටතේ විවිධ ප්‍රතිසංස්කරණ අඛණ්ඩව ක්‍රියාත්මක කිරීම සහ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ ක්‍රියාවලිය ඉක්මනින් අවසන් කිරීම හරහා ශ්‍රී ලංකා ආර්ථිකය කෙරෙහි ආයෝජකයින්ගේ විශ්වාසය තවදුරටත් යථා තත්ත්වයට පත් වන බවට දෙපාර්ශ්වයම පිළිගන්නා ලදී. ණය තිරසරභාවය සහ විනිවිදභාවය සැලකිල්ලට ගනිමින් විදේශ ණය ලබා දීමේ වැදගත්කම දෙපාර්ශ්වයම තහවුරු කළහ.
  • 2024 වසරේදී, අනෙකුත් ණයහිමි රටවලට පෙර, පෙර අත්සන් කර තිබූ යෙන් ණය ව්‍යාපෘති 11 ක් නැවත ආරම්භ කිරීම ඇතුළුව ජපානය ලබා දුන් අඛණ්ඩ සහයෝගයට ජනාධිපති දිසානායක මහතා කෘතඥතාව පළ කළේය. ශ්‍රී ලංකාවේ සම්බන්ධතා ශක්තිමත් කිරීමට සහ සංචාරක ව්‍යාපාරය ප්‍රවර්ධනය කිරීමට දායක වන බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ සංවර්ධන ව්‍යාපෘතියේ (අදියර 2) ලංසු තැබීම නැවත ආරම්භ කිරීමට දෙපාර්ශ්වයම එකඟ වූ අතර, අදාළ ක්‍රියාවලිය ඉක්මනින් නිම කිරීම සඳහා දෙරට අතර ඇති කැපවීම තහවුරු කළේය. සම්ප්‍රේෂණ මාර්ග සංවර්ධනය කිරීම සහ වැඩිදියුණු කිරීම සහ භෞමික රූපවාහිනී විකාශනය ඩිජිටල්කරණය කිරීම ඇතුළුව දැනටමත් පවතින යෙන් ණය ව්‍යාපෘති ස්ථාවරව ක්‍රියාත්මක කිරීමේ වැදගත්කමද දෙපාර්ශ්වයම තහවුරු කළහ.
  • කුඩා පරිමාණ කිරි ගොවීන්ගේ ජීවනෝපායන් වැඩිදියුණු කිරීම තුළින් ශ්‍රී ලංකාවේ සියලු දෙනා ඇතුළත් කරගත් ආර්ථික සංවර්ධනය ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණින්, කිරි අංශයේ ඵලදායිතාව වැඩි දියුණු කිරීමේ ව්‍යාපෘතිය සඳහා ජපානයේ ප්‍රදාන ආධාර සම්බන්ධයෙන් වන හුවමාරු පත්‍ර අත්සන් කිරීම සහ හුවමාරු කර ගැනීම දෙපාර්ශ්වයම පිළිගත්හ. ශ්‍රී ලංකාවේ තිරසර ආර්ථික සංවර්ධනය සඳහා, කොළඹ වැනි ප්‍රධාන නගරවල නාගරික ගමනාගමනය විධිමත් කිරීම සඳහා අවශ්‍ය යටිතල පහසුකම් සහ ප්‍රවාහන විසැඳුම් සංවර්ධනය කිරීමේ වැදගත්කම දෙපාර්ශ්වයම තහවුරු කළහ.
  • “අපනයන-පදනම් කරගත් කාර්මික කොරිඩෝවක් ගොඩනැගීම” පිළිබඳ සංකල්පීය සැලැස්ම මත පදනම්ව ජපන් ආයෝජන සමඟ අපනයනය ශක්තිමත් කිරීමට සහ වැඩි දියුණු කිරීමට ඇති ක්‍රම පිළිබඳව තවදුරටත් සාකච්ඡා කිරීමට දෙපාර්ශ්වයම එකඟ වූහ. මේ සම්බන්ධයෙන්, ශ්‍රී ලංකා කර්මාන්ත සහ ආර්ථිකය වැඩිදියුණු කිරීමේ හැකියාවන් ඒකාබද්ධව ගවේෂණය කරන අන්තර් රාජ්‍ය ආර්ථික ප්‍රතිපත්ති සංවාදය නැවත ආරම්භ කිරීමට දෙපාර්ශ්වයම එකඟ වූහ. වෙළෙඳාම සහ ආයෝජන ක්ෂේත්‍රයේ ඇති සැලකිය යුතු අවස්ථාව දෙපාර්ශ්වයම සඳහන් කළ අතර විනිවිදභාවය, පුරෝකථනය කිරීමේ හැකියාව සහ වෙනස් කොට සැලකීමකින් තොරව සැලකීම ඇතුළුව ශ්‍රී ලංකාවේ ව්‍යාපාරික පරිසරය තවදුරටත් වැඩිදියුණු කිරීමේ වැදගත්කම තහවුරු කළහ. ඒ අනුව, කාර්තුමය පදනමක් මත පැවැත්වීමට නියමිත ව්‍යාපාර පරිසරය පිළිබඳ ජපන්-ශ්‍රී ලංකා කමිටුව මෙම වසරේ අගෝස්තු මාසයේදී දියත් කිරීම පිළිබඳව දෙපාර්ශ්වයම ප්‍රසාදය පළ කළහ.
  • වත්මන් රජය තේරී පත්වීමෙන් පසු ශ්‍රී ලංකාවේ ආයෝජන සහ ව්‍යාපාරික පරිසරයේ ඇතිවෙමින් පවතින ගුණාත්මක වෙනස පිළිබඳව ජනාධිපති දිසානායක මහතා අදහස් ප්‍රකාශ කළේය. ශ්‍රී ලංකාවේ පවතින අවස්ථා ගවේෂණය කර ඉහළ විභවයක් ඇති අංශ කිහිපයක ආයෝජනය කරන ලෙස ඔහු ජපන් සමාගම්වලට ආරාධනා කළේය.
  • ඉන්දියානු සාගර කලාපයේ සාමය සහ ස්ථාවරත්වය සහතික කිරීම සඳහා දෙරට අතර ආරක්ෂක සහයෝගීතාව වර්ධනය කිරීමේ සහ ශ්‍රී ලංකාවේ ආරක්ෂක සහ නිවාරණ හැකියාවන් වැඩි දියුණු කිරීමේ වැදගත්කම දෙපාර්ශ්වයම තහවුරු කළහ. මෙම දෘෂ්ටිකෝණයෙන්, ශ්‍රී ලංකාව සඳහා වන පළමු නිල ආරක්ෂණ ආධාර ව්‍යාපෘතිය (OSA) හරහා සමුද්‍රීය නිරීක්ෂණ සහ ආපදා සහන හැකියාවන් වැඩි දියුණු කිරීමට අදාළව දියුණු මිනිසුන් රහිත ජපන් ගුවන් වාහන (UAV) සැපයීම දෙපාර්ශ්වයම පිළිගත්හ.
  • ජපාන සමුද්‍රීය ස්වයං ආරක්ෂක බලකායේ (JMSDF) යාත්‍රා මගින් වරාය ඇමතුම් (Port calls) සහ JMSDF සහ ශ්‍රී ලංකා නාවික හමුදාව අතර ඒකාබද්ධ අභ්‍යාස හරහා දෙරට අතර ආරක්ෂක සහයෝගීතාවයේ ස්ථාවර ප්‍රගතිය දෙපාර්ශ්වයම අගය කළහ. මෙම වසරේ මැයි මාසයේදී ජපාන ආරක්ෂක අමාත්‍ය නකතානි ජෙන් ශ්‍රී ලංකාවට කළ සංචාරයේදී, දෙවන ජපන්-ශ්‍රී ලංකා ආරක්ෂක සංවාදය කැඳවීම පිළිබඳව තීරණයක් ගන්නා ලද අතර, දෙරට අතර මෙම ක්ෂේත්‍රයේ සහයෝගීතාව තවදුරටත් ප්‍රවර්ධනය කිරීමට ඇති කැපවීම දෙපාර්ශ්වයම තහවුරු කළහ.
  • දූෂණය පිටුදැකීම සඳහා ශ්‍රී ලංකාව දරන ප්‍රයත්න සඳහා ජපානය අඛණ්ඩව සහයෝගය දැක්වීමට අදහස් කරන බවට අග්‍රාමාත්‍ය ඉෂිබා මහතා ප්‍රකාශ කළේය. ගැටුම්වලින් පීඩාවට පත් වූ, විශේෂයෙන් ශ්‍රී ලංකාවේ උතුරු සහ නැගෙනහිර පළාත්වල ප්‍රජාවන්ගේ සමාජ-ආර්ථික අභියෝගවලට මුහුණ දීමේ වැදගත්කම ගැන දෙපාර්ශ්වයම තහවුරු කළහ. ජාතික සංහිඳියාව සහ සමාජ-ආර්ථික සංවර්ධනය සමීපව අන්තර් සම්බන්ධිත බව මතක තබා ගනිමින්, උතුරු සහ නැගෙනහිර පළාත්වල සංවර්ධනය සඳහා ජපානයේ සහයෝගය අඛණ්ඩව ලබා දීමේ කැපවීම අග්‍රාමාත්‍ය ඉෂිබා මහතා නැවත තහවුරු කළේය.
  • ශ්‍රී ලංකාවේ බිම්බෝම්බ ඉවත් කිරීමේ කටයුතුවල ප්‍රධාන පරිත්‍යාගශීලියෙකු වන ජපානය විසින් ශ්‍රී ලංකාවේ බිම්බෝම්බ ඉවත් කිරීමේ වැඩසටහනට අඛණ්ඩව ලබා දෙන සහය පිළිබඳව ජනාධිපති දිසානායක මහතා කෘතඥතාව පළ කළේය. බිම්බෝම්බ ඉවත් කිරීමේ වැඩසටහනට ජපානයේ සහාය, “බිම්බෝම්බ බලපෑම්වලින් තොර ශ්‍රී ලංකාවක්” යන සමස්ත ඉලක්කයට සැලකිය යුතු දායකත්වයක් සපයන බවත්, ජාතික සංහිඳියාව කෙරෙහි ධනාත්මක බලපෑමක් ඇති කරන බවත්, ශ්‍රී ලංකාවේ උතුරු හා නැගෙනහිර ප්‍රදේශවල ප්‍රජා බලගැන්වීම සහ පශ්චාත් ගැටුම් සමතයකට පත්වීම සඳහා සහාය වන බවත් පිළිගැනුණි.
  • දෙපාර්ශ්වයම කුසලතා පූර්ණ මානව සම්පත් ඇතුළුව ජනතාව – ජනතාව අතර හුවමාරුව ප්‍රවර්ධනය කිරීමේ ක්‍රම සාකච්ඡා කළ අතර, දෙරට අතර භාෂා අධ්‍යාපනය, සංස්කෘතිය සහ ක්‍රීඩා වැනි ක්ෂේත්‍රවල සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම පිළිබඳව එකඟ වූහ. අන්‍යෝන්‍ය සංස්කෘතික අවබෝධය වර්ධනය වීම සැලකිල්ලට ගනිමින්, ශ්‍රී ලංකාවේ ජපන් භාෂා අධ්‍යාපනය තවදුරටත් ප්‍රවර්ධනය කිරීමේ වැදගත්කම පිළිබඳව දෙපාර්ශවයම පිළිගත් අතර මේ සම්බන්ධ ප්‍රයත්න ඉදිරියට ගෙන යෑමේ රජයන් දෙකෙහිම අභිප්‍රාය නැවත තහවුරු කළහ.
  • අන්‍යෝන්‍ය වශයෙන් උනන්දුවක් දක්වන කලාපීය සහ ජාත්‍යන්තර කරුණු පිළිබඳව දෙපාර්ශ්වයම අදහස් හුවමාරු කර ගත්හ. නිදහස් හා විවෘත ඉන්දු-පැසිෆික් කලාපයක් පිළිබඳ ජපානයේ දැක්ම තුළ කලාපය තුළ ජපානයේ වැදගත් කාර්යභාරය පිළිබඳව නැවත අවධාරණය කරමින්, රීති මත පදනම් වූ ජාත්‍යන්තර පිළිවෙල ඇතුළුව අන්‍යෝන්‍ය වශයෙන් උනන්දුවක් දක්වන කරුණු සම්බන්ධයෙන් අඛණ්ඩ සහයෝගීතාවේ අවශ්‍යතාව දෙපාර්ශ්වයම නැවත තහවුරු කළහ. බහුපාර්ශ්විකත්වය සහ ප්‍රජාතන්ත්‍රවාදය සඳහා වන සහයෝගයද දෙපාර්ශ්වයම නැවත අවධාරණය කළහ.
  • සමුද්‍රීය ජාතීන් ලෙස, දෙපාර්ශ්වයම සාමය, ස්ථාවරත්වය, ආරක්ෂාව සහ නාවික කටයුතු සහ ගුවන් ගමන් නිදහස පවත්වා ගැනීමේ වැදගත්කම නැවත තහවුරු කරන ලදී. එසේම, ස්ථාවර හා සාමකාමී ජාත්‍යන්තර සමුද්‍රීය පිළිවෙලක් පවත්වා ගැනීම සඳහා 1982 එක්සත් ජාතීන්ගේ සමුද්‍ර නීතිය පිළිබඳ සම්මුතියෙන් (UNCLOS) පිළිබිඹු කරන ජාත්‍යන්තර නීතියට ගරු කිරීමේ සහ පිළිපැදීමේ වැදගත්කම අවධාරණය කළහ.
  • ධනාත්මක ලෙස අන්තර් රාජ්‍ය සාකච්ඡා සඳහා සම්බන්ධ වීම තුළින් එක්සත් ජාතීන්ගේ ආරක්ෂක මණ්ඩලයේ මුල් ප්‍රතිසංස්කරණයක් සඳහා ඔවුන්ගේ අඛණ්ඩ සහයෝගීතාව දෙපාර්ශ්වයම නැවත අවධාරණය කළහ. ආරක්ෂක මණ්ඩලයේ ස්ථිර සාමාජිකත්වයක් ලබා ගැනීම සඳහා ජපානය ගත් උත්සාහයට ශ්‍රී ලංකාව අඛණ්ඩව සහයෝගය දැක්වීම පිළිබඳව අගමැති ඉෂිබා සිය කෘතඥතාව පළ කළේය.
  • ගෝලීය න්‍යෂ්ටික නිරායුධකරණයේ සහ ප්‍රගුණනය නොකිරීමේ මූලිකාංගය ලෙස න්‍යෂ්ටික අවි ව්‍යාප්තිය වැළැක්වීමේ ගිවිසුම (NPT) පවත්වාගෙන යෑමේ සහ ශක්තිමත් කිරීමේ වැදගත්කම දෙපාර්ශ්වයම නැවත තහවුරු කරන ලදී. එසේම දෙපාර්ශවයම මෙම ක්ෂේත්‍රය තුළ එක්ව කටයුතු කිරීමට ඒකාබද්ධව අධිෂ්ඨාන කරගෙන සිටිති. මෙම සන්දර්භය තුළ, අග්‍රාමාත්‍ය ඉෂිබා මහතා විශේෂයෙන් ශ්‍රී ලංකාව විස්තීර්ණ න්‍යෂ්ටික අත්හදා බැලීම් තහනම් කිරීමේ ගිවිසුම 2023 දී අපරානුමත කිරීම සහ ජාත්‍යන්තර පරමාණුක බලශක්ති ඒජන්සියේ (IAEA) අතිරේක ප්‍රොටෝකෝලයේ වැදගත්කම පිළිබඳව සඳහන් කළේය.
  • ජපානයේ කන්සායි, ඔසාකා හි පැවැති එක්ස්පෝ 2025 (EXPO 2025) සඳහා ශ්‍රී ලංකාව ක්‍රියාකාරීව සහභාගී වීම සහ ශ්‍රී ලංකාවේ ජාතික දින සමාරම්භක උත්සවයට සහභාගී වීම සඳහා ජනාධිපති දිසානායක මහතාගේ පැමිණීම පිළිබඳව අගමැති ඉෂිබා මහතා සිය ප්‍රසාදය පළ කළේය. සංචාරයේ අනිවාර්ය අංගයක් ලෙස ඔසාකා සහ ටෝකියෝ හි පැවැත්වෙන ඉහළ මට්ටමේ ව්‍යාපාරික උත්සව දෙකක් ඇතුළුව ආර්ථික සහයෝගීතාව වර්ධනය කිරීම කෙරෙහි අවධාරණය කිරීම දෙපාර්ශ්වයම පිළිගත්හ.
  • සංචාරය අතරතුරදී ලබා දුන් උණුසුම් පිළිගැනීම සහ ආගන්තුක සත්කාරය වෙනුවෙන් ජනාධිපති දිසානායක මහතා අග්‍රාමාත්‍ය ඉෂිබා මහතාට සහ ජපාන ජනතාවට අවංක කෘතඥතාව පළ කළේය.

 

ஜப்பான்இலங்கை கூட்டு அறிக்கை
டோக்கியோ, 2025, செப்டம்பர் 29

 

  • ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகெரு, 2025, செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை டோக்கியோவில் சந்தித்தார்.
  • ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவப்பட்ட ஆழமானதும், விரிவாக்கப்பட்டதுமான கூட்டாண்மையின் கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் தங்கள் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
  • சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சிப் பாதையை பிரதமர் இஷிபா பாராட்டியதுடன், இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் (OCC) இணைத் தலைமைகளில் ஒன்றாக விளங்குவதோடு, இவ்வாண்டு மார்ச் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பு நாடொன்று, இலங்கையுடன் செய்துகொண்ட கடன் மறுசீரமைப்பு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை  முடிவுக்குக் கொண்டுவந்த முதல் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக ஜப்பான் விளங்குகின்றமை உட்பட, இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் முன்கூட்டியே கைச்சாத்திட உதவியமைக்கும், ஜப்பானின் தலைமைக்கு ஜனாதிபதி திஸாநாயக்க பாராட்டுத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயற்படுத்துவதும், கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்கூட்டியே முடிப்பதும் இலங்கைப் பொருளாதாரத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் மீட்டெடுக்க எதுவாக அமையும் என்பதை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். கடன்சார் நிலைபேறானதன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
  • 2024 ஆம் ஆண்டில், முன்னர் கைச்சாத்திடப்பட்ட 11 யென் கடன் திட்டங்களை மீண்டும் தொடங்குவது உட்பட, கடன் வழங்கிய ஏனைய நாடுகளைக்காட்டிலும் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி திஸாநாயக்க நன்றி தெரிவித்தார். இலங்கையில் இணைப்பை வலுப்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பங்களிக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் (கட்டம் 2) ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டதை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், இது தொடர்பிலான செயன்முறையை விரைவாக முடிப்பதற்கான ஈடுபாட்டை உறுதிப்படுத்தினர். பரிமாற்றக் கோடுகளின் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி மற்றும் புவிக்காந்தவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள யென் கடன் திட்டங்களை சீராக செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
  • சிறிய அளவிலான பால் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சகலரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், பாலுற்பத்தித் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கான ஜப்பானின் மானிய உதவி தொடர்பான குறிப்புகளில் கைச்சாத்திடுவதையும் பரிமாறிக்கொள்வதையும் இரு தரப்பினரும் வரவேற்றனர். இலங்கையின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு, கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் நகர்ப்புற போக்குவரத்தை சீரமைக்க உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துசார்ந்த தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
  • “ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறை வழித்தடத்தை உருவாக்குதல்” என்ற எண்ணக்கருவிலான பயணப்பாதை வரைபடத்தின் அடிப்படையில் ஜப்பானிய முதலீட்டுடன், ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்குமான வழிகள் குறித்து மேலும் விவாதிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக, இலங்கை தொழில் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கூட்டாக ஆராயும் அரசுகளுக்கிடையேயான பொருளாதாரக் கொள்கைசார் உரையாடலை மீண்டும் தொடங்க இரு தரப்பினரும் இணங்கினர். வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் உள்ள குறிப்பிடத்தக்க வாய்ப்பு குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தியதுடன், வெளிப்படைத்தன்மை, முன்கணிப்பு மற்றும் பாகுபாடற்ற தொழிற்பாடு உள்ளிட்ட விடயங்களுடன், இலங்கையில் வணிகச் சூழலை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினர். இது சம்பந்தமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஜப்பான்-இலங்கை வணிகச் சூழல் குழுவை இரு தரப்பினரும் வரவேற்றனர்; இவ்வொன்றுகூடல் காலாண்டு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
  • தேர்தலுக்குப் பின்னரான, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியினால், இலங்கையில் ஏற்பட்டுள்ள முதலீடு மற்றும் வணிகச் சூழலில் ஏற்பட்டுள்ள தரமான மாற்றத்தை ஜனாதிபதி திஸாநாயக்க பகிர்ந்து கொண்டார். இலங்கையில் உள்ள பல உயர் திறன் கொண்ட துறைகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஆராய்ந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
  • இந்தியப் பெருங்கடல் சார்ந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான காவற்துறைசார்ந்த மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். இந்தக் கண்ணோட்டத்தில், இவ்விஜயத்தின்போது முடிவுசெய்யப்பட்ட இலங்கை தொடர்பிலான முதல் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் (OSA) திட்டத்தின் மூலம் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணத் திறன்களை மேம்படுத்துவதற்காக மேம்பட்ட ஜப்பானிய ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) வழங்கப்படுவதை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
  • ஜப்பானின் கடல்சார் சுய பாதுகாப்புப் படை (JMSDF) கப்பல்கள் மற்றும் ஜப்பானின் கடல்சார் சுய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கடற்படைக்கு இடையிலான கூட்டுப் பயிற்சிகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் திடமான முன்னேற்றத்தையும் இரு தரப்பினரும் வரவேற்றனர். இந்த ஆண்டு மே மாதம் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகாடானி ஜென் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, ​​இரண்டாவது ஜப்பான்-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையை கூட்டுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது; இத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
  • ஊழலை ஒழிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் விருப்பத்தை பிரதமர் இஷிபா தெரிவித்தார். குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். தேசிய நல்லிணக்கமும் சமூக-பொருளாதார மேம்பாடும், நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை மனதில் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை பிரதமர் இஷிபா மீண்டும் வலியுறுத்தினார்.
  • இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான, இலங்கையின் கண்ணிவெடி நடவடிக்கை திட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் ஒரு முக்கிய நன்கொடையாளராக ஜப்பான் தொடர்ந்து உதவி செய்வதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க பாராட்டு தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான ஜப்பானின் உதவி, “கண்ணிவெடி-தாக்கம் இல்லாத இலங்கை” என்ற ஒட்டுமொத்த இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய நல்லிணக்கம், சமூக அதிகாரமளித்தல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய வளர்ச்சியை ஆதரிப்பதாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
  • திறமையான மனித வளங்கள் உட்பட மக்களிடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்; மேலும் மொழிக் கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஒப்புக்கொண்டனர். பரஸ்பர கலாச்சார புரிதலை ஆழப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் ஜப்பானிய மொழிக் கல்வியை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் இணங்கியதுடன், இது தொடர்பான முயற்சிகளை முன்னேற்றுவதற்கான இரு அரசாங்கங்களின் நோக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
  • பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஜப்பானின் சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் தொலைநோக்குப் பார்வை மூலம் பிராந்தியத்தில் ஜப்பானின் அதிக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய இரு தரப்பினரும், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பிரச்சினைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தரப்பினரும் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்கான ஆதரவையும் மீண்டும் வலியுறுத்தினர்.
  • கடல்சார் நாடுகள் என்ற வகையில், இரு தரப்பினரும் அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் கடல்மார்க்க மற்றும் வான்வழிச்சுதந்திரத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்; மேலும் 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் (UNCLOS) பிரதிபலித்தது போல, நிலையான மற்றும் அமைதியான சர்வதேச கடல் ஒழுங்கைப் பேணுவதற்கு சர்வதேச சட்டத்தை மதித்து பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
  • அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான ஈடுபாட்டின் மூலம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தின் முட்கூட்டிய சீர்திருத்தத்தை நோக்கி இரு தரப்பினரும் தங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்தினர். பாதுகாப்பு மன்றில் நிரந்தர இடம் பெறுவதற்கான ஜப்பானின் முயற்சிக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு பிரதமர் இஷிபா நன்றி தெரிவித்தார்.
  • உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை கட்டமைப்பின் மூலக்கல்லாக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) பராமரித்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்; மேலும் இத்துறையில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற கூட்டாக இணங்கினர். இந்தச் சூழலில், பிரதமர் இஷிபா, 2023 ஆம் ஆண்டில் இலங்கை விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரித்ததுடன், சர்வதேச அணு இயக்கச்சக்தி முகவரகத்தின் (IAEA) மேலதிக நெறிமுறையின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
  • ஜப்பானின் ஒசாகா, கன்சாயில் நடைபெறும் எக்ஸ்போ 2025 இல் இலங்கை தீவிர ஈடுபாட்டுடன் பங்கேற்றதையும், இலங்கையின் தேசிய தினத் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி திஸாநாயக்கவின் வருகை தந்தமையினையும் பிரதமர் இஷிபா வரவேற்றார். இவ்விஜயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒசாகா மற்றும் டோக்கியோவில் இரண்டு உயர்மட்ட வணிக நிகழ்வுகள் நடைபெறுவது உட்பட பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
  • தனது ஜப்பானிய விஜயத்தின் போது, வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசரணைக்காக பிரதமர் இஷிபா மற்றும் ஜப்பானிய மக்களுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.